சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணையும் படம்!

கன்னட இயக்குனர் நார்தா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடிக்கும் படம்!

செய்திகள் 22-Apr-2019 10:35 AM IST VRC கருத்துக்கள்

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு அடுத்து நடிக்கும்கு இந்த படத்தை ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். கன்னடத்தில் ‘மஃப்டி’ என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கிய நார்தன் இப்படத்தை இயக்குகிறர். இந்த படத்தில் மதன் கார்க்கியும் பணியாற்ற உள்ளார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் மல்டிஸ்டார் படமாக அமைந்த ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு நடித்திருந்தாஅர். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் சிம்பு மீண்டும் மற்றொரு மல்டிஸ்டார் படத்தில் இணந்துள்ளார்.

#STR #Simbu #GauthamKarthik #Mufti #Narthan #Devarattam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;