‘கொலைகாரன்’ பெயரை கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு!

விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும்  ‘கொலைகாரன்’ படத்தில் கொலைகாரன் கேரக்டர் பெயரை கண்டு பிடிப்பவர்களுகு பரிசுகள் அறிவிப்பு!

செய்திகள் 20-Apr-2019 1:21 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கொலைகாரன்’. விஜய் ஆண்டனியும், அர்ஜுனும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இந்த படத்தை ‘தியா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் பிரதீப் தயாரிக்கிரார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் விநியோக உரிமையை தனஞ்சயனின் ‘பாஃப்டா’ நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக படக்குழுவினர் ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், ‘கொலைகாரன்’ படத்தில் கொலைகாரன் பாத்திரத்தின் பெயரை கண்டு பிடிக்கும் நான்கு நபர்களுக்கு ஃபாஸ்ட் டிராக் கை கடிகாரம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘கொலைகாரன்’ திரைப்படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனியுடன் இப்படத்தை பார்த்து ரசிக்கும் வாய்ப்பாக பிரீமியர் காட்சிக்கான 100 டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்காக ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை வெளியாகும் இப்படத்தின் போஸ்டர்களில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘துப்பு’களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கேள்விக்கான பதிலை ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் kgcontest2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுக்கு தேர்வாகிறவர்களின் விவரம் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் அனைவரும் கலந்துகொள்ளலாம். ஆனால் ஒருவருக்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும் என்றும் ‘கொலைகாரனி’ன் பெயருடன் போட்டியில் பங்குபெறுபவர்கள் தங்களது முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

#Kolaigaran #VijayAntony #AshimaNarwal #Arjun #VTVGanesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் - ட்ரைலர்


;