இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வெற்றிப் படமாக அமைந்த படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை தொடர்ந்து 'நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் 'அட்டகத்தி' தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து பா.ரஞ்சித் அடுத்து தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,. அதில் தனது ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் பத்ரி கஸ்தூரியின் 'ஸ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனமும் இணைந்து சுரேஷ் மாரி என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் கதையின் நாயகனக நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை இயக்குனர் ரஞ்சித் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ‘காலா’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிர்சா முண்டா என்ற பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை வரலாற்று படமாக இயக்க இருக்கிறார் என்றும் இந்த படம் ஹிந்தி மொழியில் உருவாக இருக்கிறது என்ற தகவலையும் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.
#PaRanjith #NeelamProductions #Kalaiyarasan #AravindAakash #Kaala
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...
திரைப்பட துறையில் திரைப்படங்களை வாங்கி விநியோகிக்கும் விநியோகஸ்தர்களின் பங்களிப்பு மிகவும்...
இயக்குனராக இருந்து பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் மூலம்...