வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்

புதிய முயற்சி – வரவேற்கலாம்!

விமர்சனம் 19-Apr-2019 5:59 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Vivek Elangovan

Production: Indus Creations

Cast: Vivekh, Charle, Pooja Devariya, Dev & Paige Henderson

Music: Ramgopal Krishnaraju

Cinematography: Jerald Peter

Editor: Praveen K. L.

‘பாலக்காட்டு மாத்வன்’, ‘எழுமின்’ ஆகிய படங்களின் வரிசையில் விவேக் கதையின் நாயகனாக நடித்து வெளியாகியுள்ள ‘வெள்ளைப்பூக்கள்’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

போலீஸ் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற விவேக், அமெரிக்காவில் இருக்கும் தனது மகன் ‘தேவ்’வை பார்க்க அமெரிக்கா வருகிறார். தன் மகன் வசித்து வரும் வீடருகே, தொடர்ந்து ஆள் கடத்தல் போன்ற பல அசம்பாவித சம்பவங்களை பார்த்து மிரண்டு போகிறார் விவேக்! இந்நிலையில் தேவ் வீட்டு பக்கத்தில் குடியிருக்கும் சார்லி மற்றும் அவரது மகள் பூஜா தேவரியாவுடன் நட்புடன் பழக துவங்கும் விவேக், சார்லியை தனது நண்பராக்கி அங்கு நடைபெறும் சம்பவங்களை தனது போலீஸ் மூளையால் கண்டு பிடிக்க முயற்சி செய்யும்போது, ஒரு கட்டத்தில் விவேக்கின் மகன் ‘தேவ்’வும் கடத்தப்படுகிறார்! கடத்தல்காரர்கள் கண்டுபிடிக்க ஒரு பக்கம் அமெரிக்க போலீஸ் களத்தில் இறங்க, இன்னொரு பக்கம் விவேக் தனது புலனாய்வு வேலையை தீவிரமாக்க, பல திடுக்கிடும் விஷயங்கள் தெரிய வருகிறது! அது என்ன, கடத்தலுக்கு பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது தெரிய வரும்போது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது!

படம் பற்றிய அலசல்

வழக்கமான பாலியல் வன்முறை, ஆள் கடத்தல் கதை என்றாலும் அதை கொஞ்சம் புதுமையாகவும், நல்ல ஒரு மெசேஜுடனும தர முயற்சித்துள்ளார் இப்படத்தை இயக்கியிருக்கும் விவேக் இளங்கோவன். குற்றவாளி இவராக இருக்குமோ என்று கதையில் சம்பந்தப்பட்ட எல்லோர் மீதும் சந்தேகம் வரும்படியாக திரைக்கதை பயணிக்க, கடைசியில் இவர் தான் குற்றவாளி என்று தெரிய வருவது, அவரது பின்னணி தெரிய வருவது கதையில் எதிர்பாராத திருப்பம்! இப்படி விறுவிறுப்பாகவும் சஸ்பென்ஸுடனும் கதையை நகர்த்திய இயக்குனர் லாஜிக் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. அதைப்போல தமிழகத்தில் இருந்து அமெரிக்கா வரும் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான விவேக், அமெரிக்காவில் நடக்கும் குற்றங்களை எளிதாக புலனாய்வு செய்ய முடியுமா? அதற்கு சட்டத்தில் இடம் உண்டா? என்பது போன்ற விஷயங்களை நம்பகத்தன்மையோடு தருவதிலும் கவனம் செலுத்தவில்லை. மற்றபடி விவேக், சார்லி, பூஜா தேவ்ரியா, தேவ் மற்றும் சில ஹாலிவுட் கலைஞர்களின் பங்களிப்போடும், ஜெரால்ட் பீட்டரின் சிறந்த ஒளிப்பதிவு, ராம்கோபால் கிருஷ்ணராஜுவின் பின்னணி இசை, கே.எல்.பிரவீனின் சிறந்த படத்தொகுப்பு ஆகிய விஷயங்களுடன் வெள்ளைப்பூக்களை ஓரளவுக்கு ரசிக்கக் கூடிய படமாக தந்துள்ளார் என்று சொல்லலாம்.

நடிக்ரகளின் பங்களிப்பு

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வரும் விவேக் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தவில்லை என்றாலும், தனது போலீஸ் மூளைய வைத்து புலனாய்வு செய்வதிலாகட்டும், மகன் தேவிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும்போதாகட்டும், தேவ் காதலித்து திருமணம் செய்துகொண்ட அமெரிக்க பெண் பைகே ஹாண்டர்சனிடம் வெறுப்பை வெளிப்படுத்தும்போதாகட்டும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விவேக்கின் நண்பராக வந்து அடிக்கடி சிக்கலில் மாட்டி கொள்பவரக வரும் சார்லி, அவரது மகளாக வரும் பூஜா தேவ்ரியா ஆகியோரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். இவர்களுடன் படத்தில் சில அமெடிக்க நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

பலம்

1. புதிய முயற்சி, சொல்லப்பட்டுள்ள மெசேஜ்!

2. டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. வலுவில்லாத விவேக் கேரக்டர்

2. லாஜிக் விஷயங்கள்

மொத்தத்தில்…

சொன்ன கதையை ஓரளவுக்கு சஸ்பென்ஸுடனும் எதிர்பாரத கிளைமேக்ஸுடனும் தந்த இயக்குனர், லாஜிக் மற்றும் கேரக்டர்களுக்கான நடிகர்கள் தேர்வில் மேலும் கவனம் செலுத்தி இருந்தால் ‘வெள்ளைப்பூக்கள்’ மேலும் கவனம் பெற்றிருக்கும்!

ஒருவரி பஞ்ச் : புதிய முயற்சி –வரவேற்கலாம்!

ரேட்டிங் : 4.5/10

#VellaiPookal #VellaiPookalMovieReview #Vivekh #Charle #PoojaDevariya #Dev #PaigeHenderson

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;