‘தேவராட்ட’த்துக்கு தேதி குறித்த கௌதம் கார்த்திக்!

முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’ மே 1-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 19-Apr-2019 11:27 AM IST VRC கருத்துக்கள்

‘ஹரஹர மகாதேவகி’ ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ ஆகிய படங்களை தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியிருக்கும் இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்துள்ளது. கௌதம் கார்த்திக்குடன் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சூரி, ராமதாஸ், போஸ் வெங்கட், உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இந்த படத்தை மே 1-ஆம் தேதில் ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘தேவராட்டம்’ அக்கா, தம்பி உறவை மையப்படுத்திய கதையாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;