விக்ரமின் ‘கடாரம்கொண்டான்’ ரிலீஸ் எப்போது?

விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பு!

செய்திகள் 17-Apr-2019 12:05 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் நடிப்பில் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் கதையின் நாயகனாகவும், அக்‌ஷராஹாசன் கதையின் நாயகியாகவும் நடிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் மே 31-ஆம் தேதி வெளியாகும் என்ற ஒரு தகவல் சமீபத்தில் சமுகவலைதளங்களில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ள ‘டிரைடண்ட ஆர்ட்ஸ்’ நிறுவனத்தினர் இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு பதிவை ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிட்டுள்ளனர். அதில், ‘கடாரம் கொண்டான்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்றும் இந்த படத்தை வெளியிடுவதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகவில்லை என்பது தெரிய வருகிறது.

இன்று (ஏப்ரல்-17) விக்ரம் பிறந்த நாள்! விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள இப்படத்தின் போஸ்டரிலும் பட ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இப்படத்தின் சிங்கிள் டிராக் மே 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற அறிவிப்பை படக்குழுவினர் ஏற்கெனவே வெளியிட்டிருந்தனர். இசைக்கு ஜிப்ரான், படத்தொகுப்புக்கு கே.எல்.பிரவீன், ஒளிப்பதிவுக்கு ஸ்ரீனிவாஸ் குதா என புகழ்பெற்ற டெக்னீஷியன்கள் கைகோர்த்திருக்கும் ‘கடாரம் கொண்டான்’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படமாகும்!
#KadaramKondan #Vikram #RajeshMSelva #Ghibran #RKFI #RaajKamalFilmsInternational

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வர்மா ட்ரைலர்


;