துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ அப்டேட்!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘அதித்ய வர்மா’வின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிந்துவிட்டதாம்!

செய்திகள் 16-Apr-2019 7:09 PM IST Top 10 கருத்துக்கள்

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ கைவிடப்பட்டதை தொடர்ந்து, இப்படம் வேறு ஒரு இயக்குனர் இயக்கத்தில் துருவ் விக்ரமே கதையின் நாயகனாக நடிக்க, படு வேகமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீ-மேக்கான இப்படத்திற்கு ‘ஆதித்ய வர்மா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் வங்காவின் உதவியாளர் கிரிசாயா இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். சில நாட்களுக்கு முன் துவக்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது போர்ச்சுகல் நாட்டில் நடந்து வருகிறது என்றும் இப்படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்ற தகவலும் கிடைத்துள்ளது. துருவ் விக்ரம், பனிதா சந்துவுடன் இப்படத்தில் பிரியா ஆனந்தும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ரதன் இசை அமைத்து வருகிறார். ‘ஆதித்ய வர்மா’வை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். .

#AdithyaVarma #DhruvVikram #Gireesaaya #BanitaSandhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;