அஜித் பட வில்லனும், அரிவிந்த்சாமி காதலியும் இணையும் படம்!

இனியா, ‘வேதாளம்’ பட வில்லன் ராகுல்தேவ், ‘தனி ஒருவன்’ பட நடிகை முக்தா கோட்சே இணைந்து நடிக்கும் படம் ‘காபி’.

செய்திகள் 16-Apr-2019 12:39 PM IST VRC கருத்துக்கள்

‘ஓம் சினி வென்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கும் படம் ‘காபி’. இந்த படத்தில் பாலிவுட் நிஜ ஜோடியான ராகுல் தேவ், முக்தா கோட்சே இணைந்து நடிக்க, இவர்களுடன் முக்கிய கேரக்டரில் இனியாவும் நடிக்கிறார். மற்றும் சௌந்தர் ராஜன், ராமச்சந்திரன், தரணி வாசுதேவன் ஆகியோரும் நடிக்கிறார்கள். அஜித்தின் ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்த்வர் ராகுல்தேவ். அதைப் போல நடிகை முக்தா கோட்சே ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த்சாமியின் காதலியாக நடித்த்வர். இவர்கள் இருவரும் நிஜ ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்து விடுகிறார். வாழ்வில் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும்போது மேலும் அவருக்கு பல பிரச்சனைகள் உருவாகிறது. அந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு அவர் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதைக்களம்!

இந்த படத்தின் ஒளிப்பதிவை வெங்கடேஷ் கவனிக்க, வெங்கட் நாத் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை வெங்கட் ராஜன் கவனிக்கிறார். இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்று இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#RakulDev #MugdhaGodse #Iniya #Ramachandran #Durairaj #Soundararajan #DharaniVasudevan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டிரைலர்


;