விஜய் ஆண்டனி படத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த இசை பிரபலங்கள்!

விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ படத்திற்காக இளையராஜா இசையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு யேசுதாஸ் பாடிய பாடல்!

செய்திகள் 16-Apr-2019 12:13 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் படம் ‘தமிழ்ரசன்’. மற்றும் சுரேஷ்கோபி, சோனு சூட், யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார். எஸ்.என்.எஸ்.மூவீஸ் நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இந்த படத்திற்காக இளையராஜா இசையில் யேசுதாஸ் ஒரு பாடலை பாடியுள்ளார். ஜெயராம் எழுதிய, ‘‘பொறுத்தது போதும்…. பொங்கிட வேணும்… புயலென வா…’ என்று துவங்கும் இந்த பாடலை யேசுதாஸ் பாட சமீபத்தில் பதிவானது. 2009-ல் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பழசிராஜா’ படத்திற்காக இளையராஜா இசையில் யேசுதாஸ் ஒரு பாடலை பாடியிருந்தார். இந்த பாடலை தொடர்ந்து இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடலை பாடியதில்லை! ‘பழசிராஜா’ வெளியாகி 10 ஆண்டுகளான நிலையில் ‘தமிழரசன்’ படத்தின் மூலம் மீணும் இணைந்துள்ளார்கள் இளையராஜாவும், யேசுதாஸும்! இந்த புரட்சிகரமான பாடல் படத்தில் விஜய் ஆண்டனி பாடுவது மாதிரி இடம்பெறுகிறது. .

#SureshGopi #VijayAntony #PranavMohan #Ilaiyaraaja #Thamilarasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;