விஜய் தேவரகொண்டா படத்தில் ‘டிவி புகழ்’ வாணி போஜன்!

‘தெய்வமகள்’ சீரியல் நாயகியின் தெலுங்கு சினிமா என்ட்ரி!

செய்திகள் 15-Apr-2019 6:24 PM IST Chandru கருத்துக்கள்

‘தெய்வமகள்’ மெகா தொடரின் மூலம் தமிழக மக்களிடத்தில் பரவலாக அறியப்பட்ட நடிகை வாணி போஜன் தமிழில் வைபவ் நடிக்கும் ‘என்4’ படத்தில் நடிக்கிறார் என ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்போம். தற்போது, தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார் வாணி. பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா முதன்முதலாக தயாரிக்கும் படத்தில்தான் நாயகியாகியுள்ளார் வாணி போஜன். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில், நாயகனாக நடிப்பவர் வேறு யாருமல்ல... விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி தேசிய விருதை வென்ற ‘பெல்லி சூப்புலு’ தெலுங்கு படத்தை இயக்கிய தருண் பாஸ்கர்தான். காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை குறும்பட இயக்குனர் சமீர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கான பெரும்பாலான காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#VaniBhojan #VijayDevarakonda #Deivamagal #N4 #PelliChoopulu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;