‘அறம்’ கோபி நயினார் இயக்கத்தில் பாபி சிம்ஹா!

பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு

செய்திகள் 15-Apr-2019 2:34 PM IST Top 10 கருத்துக்கள்

நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘அறம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார். 2017ல் வெளிவந்த இப்படத்திற்குப் பிறகு வேறெந்த புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார் கோபி நயினார். இந்நிலையில், நேற்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அவருடைய இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த மற்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#BobbySimha #GopiNainar #Aramm #Nayanthara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;