ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் ‘தோள் கொடு தோழா’

ஜெய் ஆகாஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் புதிய படம்!

செய்திகள் 15-Apr-2019 1:05 PM IST Chandru கருத்துக்கள்

ரோஜா மாளிகை படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு “தோள் கொடு தோழா” என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் போலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மூன்று புதுமுகங்களாக ஹரி, ராகுல், பிரேம் நடிக்கிறார்கள். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த அக்‌ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் கௌதம். இப்படத்திற்கு கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, லியோ பீட்டர் இசையமைக்க, எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார் எல்.வி.கே.தாஸ். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது. படப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் நடை பெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராட்சசி - ட்ரைலர்


;