வாட்ச்மேன் - விமர்சனம்

‘புருனோ’வுக்காக மட்டும்!

விமர்சனம் 12-Apr-2019 6:04 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: A L Vijay

Production: Double Meaning Productions

Cast: G V Prakash Kumar, Yogi Babu, Samyuktha Hegde and Suman

Music: G V Prakash Kumar

Cinematography: Nirav Shah

Editor: Anthony

கடந்த வாரம்தான் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘குப்பத்து ராஜா’ திரைப்படம் வெளியானது. இதோ, இந்த வாரம் அவரின் நடிப்பில் இன்னொரு படம். விஜய் இயக்கத்தில் ஜி.வி. நடித்து வெளிவந்திருக்கும் ‘வாட்ச்மேன்’ எப்படி இருக்கிறது?

கதைக்களம்

வட்டிக்குப் பணம் வாங்கி அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் திருடியாவது பணத்தைத் திருப்பிகொடுக்க நினைக்கிறார். அதற்காக, ஆள் அரவமில்லாத பங்களா ஒன்றிற்குள் நுழைய, அங்கே மிகப்பெரிய ஆபத்து ஒன்றில் சிக்குகிறார். அது என்ன மாதிரியான ஆபத்து? அதிலிருந்து ஜி.வி.பிரகாஷ் மீண்டாரா இல்லையா? என்பதுதான் ‘வாட்ச்மேன்’.

படம் பற்றிய அலசல்

தமிழில் வெளிவந்த மிகக்குறைந்த ரன்னிங் டைமில் உருவான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும். முதல்பாதி 45 நிமிடங்கள், இரண்டாம் பாதி 50 நிமிடங்கள் என மொத்தமே ஒரு மணி 35 நிமிடங்கள்தான் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஓட்ட நேரம். அதிலும்கூட முதல்பாதியில் ஒரு 20 நிமிடங்க¬ள் ‘கட்’ செய்துவிட்டால்கூட எந்த பாதிப்பும் இருக்காது. இடைவேளை வரை இது என்ன மாதிரியான படம் என ஒரு பிடிப்பும் ஏற்படவில்லை. ஒரு இன்ட்ரஸ்ட்டிங் ‘ட்விஸ்ட்’டோட இடைவேளை விட, அதன்பிறகு படம் விறுவிறுப்பாக இருக்கும் என நினைத்தால், அதன்பிறகும் எந்த பரபரப்புமில்லாமல்தான் இரண்டாம்பாதியும் நகர்கிறது. படத்தின் ஒரே ஆறுதல் ‘புருனோ’ என்ற பெயரில் நடித்திருக்கும் நாய்தான். மற்றபடி ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை போன்றவை படத்திற்கு தேவையான பங்களிப்பைச் செய்திருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷாக இருந்தாலும் அவருக்கு இணையான கேரக்டர் நடிகர் சுமனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே ‘புருனோ’ நாய்க்கும் முக்கியமான கேரக்டர்தான். மூவருமே இயக்குனர் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள். மற்றபடி, ஜி.வி.யின் கேரியருக்கு ‘வாட்ச்மேன்’ எந்தளவுக்கு கைகொடுக்கும் எனத் தெரியவில்லை. முதல்பாதியில் இரண்டு காட்சி, க்ளைமேக்ஸில் ஒரேயொரு காட்சி என மூன்று காட்சிகளில் தலைகாட்டியிருக்கிறார் நாயகி சம்யுக்தா ஹெக்டே. யோகி பாபு, முனீஷ்காந்த் என இரண்டு காமெடியன்கள் இருந்தும், ரசிகர்களை சிரிக்க வைக்க படாதபாடு பட்டிருக்கிறார்கள். வில்லன் ராஜ் அர்ஜுனுக்கு ‘டெரரான’ கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பார்க்க பாவமாக இருக்கிறார்.

பலம்
நாய் சம்பந்தப்பட்ட காட்சிகள்

பலவீனம்
படத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தும் ‘வீக்’காகவே உள்ளன

மொத்தத்தில்...
மிகக்குறைந்த ரன்னிங் டைமில் உருவாகியுள்ள இப்படம் பெரிய பரபரப்புகளோ, சுவாரஸ்யமே இல்லாமல் நகர்கிறது. பரபரப்பான ஒரு ஒன்லைன் கையில் கிடைத்தும், அதை வைத்து ஒரு இன்ரஸ்ட்டிங்கான த்ரில்லரை கொடுக்கத் தவறியிருக்கிறது ‘வாட்ச்மேன்’ டீம்.

ஒரு வரி பஞ்ச்: ‘புருனோ’வுக்காக மட்டும்!

ரேட்டிங்: 3/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;