‘காக்டெய்லி’ல் ஹீரோவானார் யோகி பாபு!

பி.ஜி.முத்தையா தயாரிக்கும் ‘காக்டெய்ல்’ படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார்!

செய்திகள் 12-Apr-2019 1:40 PM IST VRC கருத்துக்கள்

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பி.ஜி.முத்தையா ‘COCKATAIL’ ரக பறவை ஒன்றை மையமாக வைத்து ‘காக்டெய்ல்’ என்ற படத்தை தயாரிக்கிறார் என்ற செய்தியை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இந்த படம் குறித்த மேலும் பல புதிய தகவல்களை படக்குழுவினர் இப்போது வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் இடம்பெறும் அந்த பறவை ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பறவை என்றும் இது இப்படத்தில் மைய கதாபாத்திரமாக வருகிறது என்றும் தெரிவித்துள்ள படக்குழுவினர் இப்படத்தில் ‘யோகி’ பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவருடன் சயாஜி ஷிண்டே காமெடி கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர். மற்றும் இப்படத்தில் மனோபாலா, மைம் கோபி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ரமேஷ், மிதுன், ‘கலக்கப்போவது யாரு’ புகழ் பாலா குரேஷி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் யோகி பாபு நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். படத்தின் கதைபடி யோகி பாபுவும் அவரது நண்பர்களும் எதிர்பாரதவிதமாக ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொள்கிறார்கள். கொலையுண்டவர் யார்? கொலை செய்தவர் யார்? இந்த கொலை வசக்கில் அந்த பறவையின் பங்கு என்ன? என்பது தான் இப்படத்தின் கதையாம்.

ஜி.வி.பிரகாஷிடம் பணிபுரிந்த் சாய் பாஸ்கர் இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆகிறார். பி.ஜி.முத்தையாவின் சிஷ்யரான ரவீன் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஃபாசில் படத்தொகுப்பு செய்கிறார். சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை சுற்றுப் புறங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

#YogiBabu #Cocktail #Cockatoo #PGMuthiah #RJRaveen #GVPrakash

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூர்கா டீஸர்


;