மணிரத்னம் படத்தில் விக்ரம் பிரபு!

மணிரத்னம் கதை, வசனம் எழுத, தனா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும்  ‘வானம் கொட்டட்டும்’

செய்திகள் 12-Apr-2019 11:24 AM IST Top 10 கருத்துக்கள்

‘இருவர்’, ‘நேருக்கு நேர்’, ‘தில்சே’, ‘அலைபாயுதே’, ‘ராவணன்’ உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனம் மணிரத்னத்தி ‘ மெட்ராஸ் டாக்கீஸ்’. இந்த நிறுவனத்தின் 19-வது தயாரிப்பாக ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் கதை, வசனத்தை மணிரத்னம் எழுத, மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவரும் ‘படை வீரன்’ படத்தை இயக்கியவருமான தனா இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘96’ படப்புகழ் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ‘அபியும் நானும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரீத்தா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை அமரன் கவனிக்க, ஏகா லகானி ஆடை வடிவமைப்பு பணியை மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் ஆரம்பமாக உள்ளது.

#VikramPrabhu #ManiRatnam #Dhana #MadrasTalkies #VaanamKottatum # AishwaryaRajesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேரன்பு ட்ரைலர்


;