வெங்கட் பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பெனியும், பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘RK நகர்’. வைபவ், சனா அல்தாஃப், அஞ்சனா கீர்த்தி, சம்பத்ராஜ், சந்தானபார்தி, சுப்பு பஞ்சு உட்பட பலர் நடித்துள்ள இந்த படம் இம்மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளி வைக்கப்படுகிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கட் பிரபு ஒரு வீடியோ பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வார ரிலீஸ் களத்திலிருந்து RK நகர்’ பின் வாங்கியுள்ளது. இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
RKNagar #VenkatPrabhu #Vaibhav #SanaAlthaf #InigoPrabhakaran #SampathRaj #PremjiAmaran
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...