ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைந்த நகுல் பட ஹீரோயின்!

எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்த நிகிஷா பட்டேல்!

செய்திகள் 9-Apr-2019 12:24 PM IST Top 10 கருத்துக்கள்

நகுலுடன் ‘நாரதன்’, சக்தி வாசுதேவனுடன் ‘7 நாட்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள நிகிஷா பட்டேல் கடைசியாக நடித்த தமிழ் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்நிலையில் நிகிஷா பட்டேலுக்கு எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஈஷா ரெபா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அபிஷேக் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரமேஷ் பிள்ளை தயாரிக்க்ம் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற 2-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன் முதலாக நடிக்கும் இந்த படமும் எழிலின் காமெடி ஃபார்முலாவிலேயே உருவாகிறது. வழக்கமாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு அவரே இசை அமைப்பது வழக்கம். ஆனால இந்த படத்திற்கு சி.சத்யா இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐங்கரன் ட்ரைலர்


;