‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஹிந்தி ‘பிங்க்’ படத்தின் ரீ-மெக்காக உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியங், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர்கள் நடித்திருக்கும் நிலையில் இப்படத்தில் மற்றுமொரு பாலிவுட் நடிகை நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கல்கி கோச்சல்! இவர் இந்த படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளாராம். ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான கல்கி கோச்சல் புதுச்சேரியில் பிறந்த ஃபிரெஞ்சு நாட்டை பூர்வீகமாக கொண்டவராவார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
#Ajith #NerkondaPaarvai #KalkiKoechlin # YuvanShankarRaja #VidyaBalan #ShraddhaSrinath #HVinoth
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...