முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த தனுஷ்!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘தனுஷ்-34’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

செய்திகள் 8-Apr-2019 12:13 PM IST VRC கருத்துக்கள்

வசூல் அள்ளிய ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தனுஷ் நடிப்பில் இரண்டு படங்களை தயாரிக்கிறது. இதில் ஒரு படத்தை தனுஷ் நடிப்பில் ’கொடி’ படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரும், இன்னொரு படத்தை ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமாரும் இயக்குகிறார்! இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படம் தனுஷின் 34-வது படமாகும். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்போது அந்த படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்றும் தனுஷ் அடங்கிய படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவிட்துள்ளனர்.

இந்த படத்தில் தனுஷுடன் சினேகா, நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக், மெர்வின் ஆகியோர் இசை அமைக்கும் இந்த படத்தின் இரண்டாம கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

#Dhanush #DuraiSenthilkumar #SathyaJyothiFilms #ProductionNo34

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;