ராஜமௌலியின் ‘RRR’ பட படப்பிடிப்பு நிறுத்தம்!

ராஜமௌலி இயக்கும் ‘RRR’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

செய்திகள் 4-Apr-2019 11:41 AM IST VRC கருத்துக்கள்

‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம் ‘RRR’. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை எட்கர் ஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் புனேயில் துவங்க இருந்தது. இந்நிலையில் ராம் சரண் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது அவர் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ‘RRR’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று வாரங்களுக்கு பிறகு படப்பிடிப்பு வேலைகள் முழு வீச்சில் துவங்கும் என்றும் படக்குழுவினர் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் ராஜமௌலியின் ‘RRR’ படப்பிடிப்பு இப்போது முடங்கியுள்ளது.

#Rajamouli #RRR #RamCharan #JrNTR #AliaBhatt #AjayDevgn #Samuthirakani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;