‘காஞ்சனா-3, முனி-4’, ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஆகிய படங்களுடன் களமிறங்கும் விவேக் படம்!

விவேக் கதையின் நாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள் ஏப்ரல் 19-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 3-Apr-2019 11:09 AM IST VRC கருத்துக்கள்

பெரும்பாலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள விவேக் ஏற்கெனவே ஒரு சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். அந்த வரிசையில் விவேக் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்த படத்தை அமெரிக்காவை சேர்ந்த விவேக் இளங்கோவன் இயக்க, இப்படத்தின் கதை அமெரிக்காவில் நடைபெறுவதுமாதிரியே அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இப்படத்தில் பணியாற்றியுள்ள பெரும்பாலான தொழில்நுட்ப கலைஞர்களும் அமெரிக்காவை சேர்ந்தவர்களே! இந்த படத்தில் விவேக்குடன் சார்லி, பூஜா தேவரியா உட்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் ஏற்கெனவே வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை மீண்டும் படக்குழுவினர் வெளியிட்டிருப்பதோடு இப்படத்தை டிரைடன்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் வருகிற 18-ஆம் தேதி நடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிந்த மறுநாள் அதாவது ஏப்ரல் 19-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதே தினம் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் ‘காஞ்சனா 3, முனி 4’, அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஆகிய படங்களும் வெளியாக இருப்பதால் இப்படங்களுடன் களமிறங்குகிறது விவேக்கின் ‘வெள்ளைப்பூக்கள்’.

#VellaiPookal #VivekElangovan #Kanchana #Kanchana3 #RaghavaLawrence #MehandiCircus

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;