10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ‘போக்கிரி’ டீம்!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘தபாங்’ ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 2-Apr-2019 1:36 PM IST VRC கருத்துக்கள்

நடன இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த பிரபுதேவா விஜய் நடித்த ‘போக்கிரி’ படத்தின் மூலம் இயக்குனரானார். இதனை தொடர்ந்து பல படங்களை இயக்கிய பிரபுதேவா தமிழ் ‘போக்கிரி’ படத்தை ஹிந்தியில் ‘வாண்டட்’ என்ற பெயரில் ரீ-மேக் செய்து இயக்கினார். இந்த படத்தில் சல்மான்கான் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து பிரபு தேவா ஹிந்தியில் மற்றும் சில படங்களை இயக்கினார். இந்நிலையில் பிரபுதேவாவும், சல்மான்கானும் மற்றுமொரு படத்தில் இணைய இருக்கிறாகள் என்று பேசப்பட்டு வந்தது. அந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ‘போக்கிரி’யின் ஹிந்தி ரீ-மேக்கான ‘வாண்டட்’ வெளியாகி பத்து ஆண்டுகளான நிலையில் ‘தபாங்’ படத்தின் மூன்றாவது பாகத்தில் இணைந்துள்ளனர் பிரபுதேவாவும் சல்மான் கானும்!

சல்மான் கான் நடிப்பில் வெளியான முதல்பாக ‘தபாங்’ படத்தை அபினவ் காஷ்யாப் இயக்கியிருந்தார். இரண்டாம் பாக ‘தபாங்’கை அர்பாஸ் கான் இயக்கி இருந்தார். மூன்றாம பாகமாக உருவாகும் படத்தை இப்போது பிரபுதேவா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

#PrabhuDeva #Dabangg3 #ArbaazKhan # SalmanKhan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி 2 டீஸர்


;