சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்?

உயர்ந்த மனிதன் படத்தில் பாலிவுட் சூப்பார் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்?

செய்திகள் 1-Apr-2019 1:23 PM IST VRC கருத்துக்கள்

பல்வேறு படங்களில் மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் வெளியான தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ரம்யா கிருஷ்னணுக்கு கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.எஜே.சூர்யாவும், அமிதாப்பச்சனும் இணைந்து நடிக்கும் படம் ‘உயர்ந்த மனிதன்’. தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இப்படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் தேர்வாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ் படம் ‘உயர்ந்த மனித’னாகும்!
#UyarndhManithan #AmitabhBachchan #RamyaKrishnan # SJSurya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;