‘RK நகர்’ - தேதி குறித்த வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு தயாரிப்பில் சரவணராஜன் இயக்கியுள்ள ‘RK நகர்’ ஏப்ரல 12-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 1-Apr-2019 11:29 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபுவின் ‘BLACK TICKET’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘RK நகர்’. வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் ‘வடகறி’ படத்தை இயக்கியவருமான சரவணராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் வைபவ், சனா, சம்பத், அஞ்சனா கீர்த்தி, சந்தானபாரதி, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உட்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் நடந்த இடைதேர்தல மூலம் மிகவும் பேசப்பட்ட தொகுதி ஆர்.கே.நகர். இந்த தொகுதியின் பெயரில் உருவாகியுள்ள இந்த படமும் அரசியல் கலந்த படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது! இந்நிலையில் இம்மாதம் 18-ஆம் தேதி பாரளுமன்றத்துக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ‘RK நகர்’ படத்தை தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக அதாவது ஏப்ரல் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதே தினம் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘வாட்ச்மேன்’, பிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி-2’, சி.வி.குமார் இயக்கியுள்ள ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’, ஜீவா, நிக்கி கல்ரானி நடிக்கும் ‘கீ’ ஆகிய படங்களும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .

#RKNagar #Vaibhav #SanaAlthaf #Anjenakirti #SampathRaj #PremgiAmaren

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;