ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா!

நயன்தாராவை அவதூறாக பேசிய நடிகர் ராதாரவியை திமுக கட்சியிலிருந்து நீக்கியதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா!

செய்திகள் 25-Mar-2019 3:59 PM IST VRC கருத்துக்கள்

சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்ற ‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி இப்படத்தில் நடிக்கும் நயன்தாரா குறித்து பேசும்போது நாகரீகமற்ற முறையில் இரட்டை அரத்தத்தில் பேசினார். ராதாரவியின் இந்த பேச்சுக்கு சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் நடிகர் ராதாரவி அங்கம் வகித்து வந்த ‘திமுக’ கட்சியிலிருந்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினால் தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னை அவதூறாக பேசிய நடிகர் ராதாரவி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்காக திமுக கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

#Nayanthara #RadhaRavi #MKStalin # #KolaiyuthirKaalam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;