மக்களுக்கான படம் ‘உறியடி-2’

‘உறியடி-2’ சூர்யா என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் படமாக அமையும்! – இயக்குனர் விஜயகுமார்

செய்திகள் 23-Mar-2019 3:09 PM IST VRC கருத்துக்கள்

பெரிதும் கவனம் பெற்ற ‘உறியடி’ படத்தை தந்த விஜயகுமாரின் அடுத்த படைப்பு ‘உறியடி-2’. சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ஆடியோ மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. அப்போது இயக்குனர் விஜயகுமார் பேசும்போது,

‘‘இந்த படத்தை ஏன் சூர்யா சார் தயாரிக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய பொருளாதரா நிலைமைதான். அதே நேரம் சூர்யா சாருக்கு மக்கள் மீதும் இந்த சமூகம் மீதும் மிகவும் அக்கறை இருக்கிறது. அந்த வகையில் இது மகளுக்கான ஒரு படம்! சூர்யா சார் என் மீது வைத்த நம்பிக்கையை இந்த படம் நிச்சயமாக காப்பாற்றும்.. இந்த படத்தை தயாரிக்க முன் வந்த சூர்யா சாருக்கும், ‘2D’ நிறுவனத்தை சேர்ந்த ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் சாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்!

‘‘சமூகத்தின் சமநிலை தவறும்போதெல்லாம் சகலமும் அவலமாகும். மனிதத் தன்மை கேள்விக்குறியாகும். பொறுமை காத்தால் உடமை பறிப்போகும். உரிமை காக்க போராடுவதே நமது கடமை! அரசியலில் நாம் தலையிடணும். இல்லை என்றால் அரசியல் நம் வாழ்க்கையில் தலையிடும்!’’ இதுபோன்ற கருத்துற்ற வசன்ங்கள் இப்படத்தின் டீஸரில் இடம் பெற்றுள்ளது. அதைப் போலவே ‘உறியடி-2’ சாதிய ஒடுக்குமுறை அரசியலை பேசும் படமாக இருக்கும் என்று இப்படக்குழுவினர் தெரிவித்தனர்.

#Suriya #VijayKumar #Uriyadi2 #2DEntertainment #GovindVasantha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NGK - ட்ரைலர்


;