‘உறியடி-2’ எல்லோரையும் யோசிக்க வைக்கும்! - சூர்யா

விஜயகுமார் இயக்கி நடித்துள்ள ‘உறியடி-2’ மகிழ்ச்சிப்படுத்தாது, மாறாக சிந்திக்க வைக்கும் என்கிறார் சூர்யா!

செய்திகள் 23-Mar-2019 1:55 PM IST Top 10 கருத்துக்கள்

‘உறியடி’ படத்தை இயக்கி, தயாரித்து, நடித்த விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘உறியடி-2’. சூர்யாவின் ‘2D எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் விஜயகுமாரே கதையின் நாயகனாக நடிக்க, விஸ்மயா கதாநாயகியாக நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்த இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. பாடல்களை சூர்யா வெளியிட்டார். விழாவில் சூர்யா பேசுகையில்,

‘‘இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கும் கோவிந்த் வசந்தாவை கேரளாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில்தான் நான் முதன் முதலாக பார்த்தேன். அவருடையை வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இங்கு அவர் பேசும்போது மிகவும் தெளிவாக பேசினார். அவர் இந்த படத்தின் மூலம் ‘2D’யில் இணைந்திருப்பதிலும், இப்படத்திற்காக இரண்டு பாடல்கள் பாடியிருப்பதும் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்த படத்தை இயக்கியிருக்கும் விஜயகுமாரை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த படம் சம்பந்தமாகதான் விஜயகுமாரை முதன் முதலாக பார்த்தேன். அதற்கு அப்புறம்தான் அவர் இயக்கிய ‘உறியடி’ படத்தை பார்த்தேன். அந்த படத்தில் எல்லாம் உண்மையாக இருந்தது. உறியடை என்னை ஆச்சர்யப்படுத்தியது. அதைப் போலத்தான் விஜயகுமாரும். ஒருத்தர் சினிமாவில் இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா என்று அவரை பார்த்து வியந்தேன்.

விஜயகுமாரின் உண்மையாக இருக்கும் குணம் அவரது திட்டமிடல் எல்லாம் எனக்கு பிடித்திருந்தது. உறியடி வெளியாகி நான்கைந்து ஆண்டுகளான நிலையில் ஏன் அவரது அடுத்த படம் வரவில்லை என்ற கேளவி எல்லோரிடத்திலும் நிச்சயம் எழுந்திருக்கும். காரணம் ‘உறியடி’ அப்படியொரு கேள்வியை கேட்கும்விதமாக அமைந்திருந்தது. அப்படியிருக்க அவர் தனது இரண்டாவது படத்தை எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பண்ணியிருப்பதில் பெரும் மகிழ்ச்சி! விஜயகுமாரின் டீம் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ‘உறியடி-2’ உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாது! மாறாக உங்களை டிஸ்டர்ப் செய்யும், யோசிக்க வைக்கும்’’ என்றார்.

#Suriya #VijayKumar #Uriyadi2 #2DEntertainment #GovindVasantha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NGK - ட்ரைலர்


;