சூர்யாவின் ‘NGK’ அப்டேட்!

சூர்யா நடிக்கும் ‘NGK’ படத்திற்கான டப்பிங் வேலைகளை துவங்கினார் சூரயா!

செய்திகள் 23-Mar-2019 12:53 PM IST Top 10 கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘NGK’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்திற்கான டப்பிங் வேலைகளை சூர்யா நேற்று துவங்கினார். இந்த அதிகாரபூர்வ தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு ட்வீட் செய்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படமான இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்து வருகிறார். ‘NGK’ மிக விரைவில் வெளியாக இருக்கிறது.

#Suriya #NGK #Saipallavi #Rakul #Selvaraghavan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காப்பான் - டீஸர்


;