‘சாமி-2’ படத்தயாரிப்பாளரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு?

புலி, இருமுகன். சாமி-2 ஆகிய படங்களை தொடர்ந்து ஷிபு தமீன் தயாரிக்கும் படத்தில் திலீப், அர்ஜுன், அஞ்சு குரியன் நடிக்கிறார்கள்!

செய்திகள் 22-Mar-2019 11:16 AM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில் ‘புலி’, விக்ரம் நடிப்பில் ‘இருமுகன்’, ‘சாமி-2’ ஆகிய படங்களை தயாரித்தவர் ஷிபு தமீன். இவரது ‘தமீன் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சாமி-2’. இந்த படத்தை தொடர்ந்து ஷிபு தமீன் தயாரிக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ‘ஜாக் டேனியல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப் கதாநாயகனாக நடிக்க, ஒரு முக்கிய கேரக்டரில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சு குரியன் நடிக்கிறார். எஸ்.எல்.புரம் ஜெயசூர்யா இயக்குகும் இந்த படம் மலையாள மொழியில் உருவாக, இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த தகவல்களை தயாரிப்பாளர் ஷிபு தமீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் - ட்ரைலர்


;