மீண்டும் ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ்!

‘ஜாக்சன் துரை’ படத்தை தொடர்ந்து தரணீதரன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘ஷிவா’

செய்திகள் 21-Mar-2019 11:44 AM IST VRC கருத்துக்கள்

தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ், சத்யராஜ் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஜாக்சன் துரை’. வெற்றிப் படமாக அமைந்த இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தரணீதரனும், சிபிராஜும் ஒரு படத்தில் இணைகிறார்கள். இந்த படத்திற்கு ‘ஷிவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘MG AURAA CINEMAS’ என்ற நிறுவனம் சார்பில் காவ்யா மகேஷ் தயாரிக்கிறார். ஏற்கெனவே சிபிராஜுடன் ‘சத்யா’வில் கதாநாயகியாக நடித்த ரம்யா நம்பீசன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளாவில் நடைபெற உள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது. கமல் நடித்த ‘சத்யா’ படத்தின் டைட்டிலை தனது படத்திற்கு சூட்டிய சிபிராஜ், ரஜினி பட டைட்டிலான ‘ரங்கா’வையும் தனது படத்திற்கு தலைப்பாக்கி நடித்து வருகிறார். ‘ரங்கா’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தான் நடிக்கும் படத்திற்கு ரஜினி பட டைட்டிலான ‘ஷிவா’வை தலைப்பாக்கியுள்ள சிபிராஜ் மற்றுமொரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

#Sibiraj #Rajini #RamyaNambessan #JacksonDurai #AURAACINEMAS

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;