‘முனி’, ‘பரதேசி’, ‘காவியத்தலைவன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள வேதிகா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘முனி 4, காஞ்சனா 3’. ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வேதிகா. இந்த படத்தில் வேதிகாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் ஆதி சாய்குமார் நடிக்கிறார். ‘அவுரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கார்த்தி விக்னேஷ் இயக்குகிறார். வேதிகா 8 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் நடிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 25-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறதாம்!
#Vedhika #AadiSaikumar # #Kanchana3 #Muni
கடந்த 19-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான படம் ‘காஞ்சனா-3’. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இந்த படத்தில்...
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் படம் ‘காஞ்சனா-3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம்...
பெரும்பாலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள விவேக் ஏற்கெனவே ஒரு சில படங்களில்...