அசுரன் - ஜெயில் : இசைப்பணியில் பிஸியான ஜி.வி.!

தான் இசையமைக்கும் படங்கள் பற்றிய புதிய தகவலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

செய்திகள் 19-Mar-2019 3:47 PM IST VRC கருத்துக்கள்

ஒருபுறம் நாயகனாக நடித்துக்கொண்டே இன்னொருபுறம் தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமின்றி, மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தற்போதும் அரை டஜன் படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ், அதில் வசந்த பாலன் இயக்கத்தில் தான் ஹீரோவாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘ஜெயில்’ படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகளை துவங்கிவிட்டதாக ட்வீட் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

இன்னொருபுறம் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ படத்திற்கான பாடல் ட்யூன் உருவாக்கும் பணிகளிலும் மும்முரமாக இருக்கிறாராம் ஜி.வி.

#Asuran #Dhanush #GVP #GVPrakash #Jail

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;