விஜய்சேதுபதி, விக்ராந்த் கூட்டணியில் விஷ்ணு விஷால்!

விக்ராந்தின் சகோதரர் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

செய்திகள் 18-Mar-2019 12:21 PM IST Chandru கருத்துக்கள்

ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இடையிடையே நட்புக்கும் கைகொடுப்பவர் விஜய்சேதுபதி. அந்த வகையில், விக்ராந்த் ஹீரோவாக நடிக்க, அவரின் சகோதரர் சஞ்சீவ் இயக்கும் படத்தின் திரைக்கதையை எழுதுகிறார் விஜய்சேதுபதி என சில நாட்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. தற்போது அப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கிறாராம். இப்படம் குறித்த மேலும் சில முக்கிய விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதி திரைக்கதை எழுதும் 2வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள வெண்ணிலா கபடி குழு 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, பக்ரீத் போன்ற படங்கள் விரைவில் வெளியாகும் எனவும் பேசப்படுகிறது.
#Vikranth #VishnuVishal #VennilaKabaddiKuzhu2 # VijaySethupathi #MakkalSelvan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;