6 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் கை கோர்க்கும் பிரபலம்!

ஆரம்பம் படத்தை தொடர்ந்து 6 வருடங்களுக்கு பிறகு அஜித் படத்திற்கு பாடல் எழுதும் பா.விஜய்!

செய்திகள் 13-Mar-2019 1:22 PM IST VRC கருத்துக்கள்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘பிங்க்’ ஹிந்தி படத்தின் ரீ-மேக்காக உருவாகி வரும் இந்த படத்தின் கதையில் இயக்குனர் வினோத் சில மாற்றங்களை செய்து இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தில் அஜித் விதயாபாலனுக்காக பா.விஜய் ஒரு படலை எழுதியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் 6 வருடங்களுக்கு முன் வெளியாகிய ‘ஆரம்பம்’ படத்திற்காக யுவன சங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களையும் பா.விஜய் எழுதியிருந்தார். ‘ஆரம்பம்’ வெளியாகி 6 வருடங்களான நிலையில் இப்போது அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ மூலம் மீண்டும் அஜித் படத்தில் இணைந்துள்ளார் பா.விஜய்!

#Ajith #NerKondaPaarvai #Thala #PaVijay #HVinoth #ShraddhaSrinath

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;