டைட்டில் அறிவிப்புடன் துவங்கிய சிவகார்த்திகேயன் படம்!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘ஹீரோ’

செய்திகள் 13-Mar-2019 12:22 PM IST VRC கருத்துக்கள்

‘இருமுபுத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். அத்துடன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கல்யாணி பிரியதர்சன், இவானா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்ற தகவலையும் வெளியிட்டிருந்தோம். சிவகார்த்திகேயன் நடிக்கும் 15-அவது படமான இப்படத்திற்கு ‘HERO’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை கோட்டபடி ராஜேஷின் ‘கே.ஜெ.ஆர்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. மித்ரன் இயக்கிய இரும்புத்திரை படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா, படத்தொகுப்பு செய்த ரூபன், ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோர் இப்படத்திலும் மித்ரனுடன் இணைந்து பணி புரிகிறாரகள்.

#SK #SivaKarthikeyan #PSMithran #KalyaniPriyadarshan #Ivana

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;