‘போஸ்’ வெங்கட் படத்திற்காக பாடல் பாடிய ‘ரோபோ’ சங்கர்!

போஸ் வெங்கட் இயக்கும் படத்திற்கால ரோபோ சங்கர் பாடிய பாடல்…

செய்திகள் 12-Mar-2019 12:09 PM IST VRC கருத்துக்கள்

ஆட்டோ ஓட்டுனராக இருந்து நடிகராக புரொமோஷன் பெற்றவர் ‘போஸ்’ வெங்கட்! தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் என்று நடிகராக வலம் வந்து கொண்டிருந்த ‘போஸ்’ வெங்கட் இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், ‘ஆடுகளம்’ முருகதாஸ், கஜராஜ், அறிமுக நடிகை காயத்ரி (யார் கண்ணன் மகள்), வலீனா ப்ரின்சஸ், விஷ்ணுராமசாமி, ‘சூப்பர்குட்’ சுப்பிரமணி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்காக ‘ரோபோ’ சங்கர் குரலில் ஒரு பாடலை பதிவு செய்துள்ளார் இயக்குனர் போஸ் வெங்கட்!

இது குறித்து ‘போஸ்’ வெங்கட் கூறும்போது, நான் துவக்கத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருந்ததால் அதற்கு மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக ஒரு பாடலை உருவாக்க, அதை ராகம் மற்றும் ஸ்ருதி பற்றி தெரியாத ஒருவர்தான் பாட வேண்டும் என்று விரும்பினேன். காரணம், சாதாரண ஒரு தொழிலாளி பாடுவது போல் அந்த பாடல் அமைய வேண்டும். அதற்கான குரலை தேடியபோது ‘ரோபோ’ சங்கர் குரல் பொருத்தமாக இருக்கும் என்று அவரை பாட வைத்தோம்.இதற்கு இப்படத்திற்கு இசை அமைக்கும் ஹரி சாய்யும் ஒத்துழைப்பு செய்தார். ரோபோ சங்கர் குரலில் அந்த பாடல் நன்றாக வந்துள்ளது’’ என்றார்.

‘கன்னிமாடம்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ‘ரூபி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஹஷீர் தயாரிக்க, இப்படத்திற்கு இனியன் ஜே.ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்கிரார். ரிசால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்து வருகிறார்.

#BoseVenkat #RoboShankar #KanniMaadam #HariSai #KarthikSubbaraj #Murugadoss

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வாசம் ட்ரைலர்


;