ரிலீஸுக்கு தயாராகி வரும் சூர்யாவின் ‘உறியடி-2’

சூர்யாவின் ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் ‘உறியடி-2’ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது!

செய்திகள் 12-Mar-2019 12:00 PM IST VRC கருத்துக்கள்

‘உறியடி’ படத்தை இயக்கிய விஜய்குமார் இப்போது இயக்கி வரும் படம் ‘உறியடி-2’. இந்த படத்தை சூர்யாவின் ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. முதல்பாக ‘உறியடி’யில் நடித்த நடிகர்கள் ‘உறியடி-2’ படத்திலும் நடிக்கிறார்கள். கூடவே யூட்யூப் மூலம் பலருக்கும் பரிச்சயமான ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் நடித்திருக்கிறார். ‘உறியடி’ படத்தில் பணிபுரிந்த பெரும்பாலான டெக்‌னீஷியன்கள் இப்படத்திலும் பணிபுரிய, ‘அசுரவதம்’, ‘96’ ஆகிய படங்கள் மூலம் பெரும் புகழ்பெற்ற கோவிந்த வசந்தா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

‘உறியடி-2’ படம் குறித்து இயக்குனர் விஜய்குமார் கூறும்போது, ‘உறியடி’ படத்தில் பேசிய ஜாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச வருகிறது ‘உறியடி-2’. இப்போது உள்ள சமூகத்திற்கு ஜாதி பிரிவினைதான் பெரும் பிரச்சனை. எனக்கு கம்யூனிச சிந்தனையோ புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. ஆனால் எனக்கு ரொம்பவும் பிடித்தது சினிமா! அதை ஆத்மார்த்தமாக கொடுக்க முயற்சி செய்கிறேன்.

நான் ‘உறியடி-2’ கதையை சூர்யா சாரிடம் சொன்னதும், ‘எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு, கண்டிப்பா படம் பண்ணாலாம்’ என்று சொன்னார். அப்போது எனக்கு பெரிய நம்பிக்கை வந்தது. காரணம், ‘உறியடி’ பட ரிலீஸ் நேரத்தில் ஏகபட்ட பிரச்சனைகளை சந்தித்தோம். பொருளாதார இழப்பை விட மனவலிதான் அதிகமாக இருந்தது. ‘உறியடி-2’ படத்திற்கு சூர்யா சார் தயாரிப்பு நிறுவனம் கிடைத்ததால் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. சூர்யா சார் ஒரு படைப்பாளிக்கு என்ன சுதந்திரம் கொடுக்கணுமோ அதை எனக்கு கொடுத்தார். ஷூட்டிங் முடிகிற வரைக்கும் எந்தவிதமான அழுத்தங்களும் தரவில்லை. அதனால் படத்தை நினைத்தது மாதிரி எடுக்க முடிந்தது. இப்போது படம் சம்மர் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது’’ என்றார்.

#Suriya #Uriyadi2 #VijayKumar #Sudhakar #Vismaya #GovindVasantha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;