அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ அப்டேட்!

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்

செய்திகள் 12-Mar-2019 11:15 AM IST Top 10 கருத்துக்கள்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. பாலிவுட் பிரபலம் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துடன் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவலாக இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் ஏப்ரல் நடுப்பகுதி வரை முழுவீச்சில் நடைபெறவிருக்கிறது என்று இப்படத்தின் மற்றும் அஜித்தின் மக்கள் தொடர்பு பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகிய ‘பிங்க்’ ஹிந்தி படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக்காக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

#NerkondaPaarvai #Ajith #ShraddhaSrinath #AbhiramiVenkatachalam #AndreaTaring #RangarajPandey #HVinoth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;