‘ஒத்த செருப்பு’டன் வரும் பார்த்திபன்!

பார்த்திபன் அடுத்து இயக்கி தயாரித்து நடிக்கும் படம் ‘ஒத்த செருப்பு’

செய்திகள் 11-Mar-2019 3:50 PM IST VRC கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தை இயக்கி, தயாரித்து நடிக்கிறார் பார்த்திபன். எப்போதுமே வித்தியாசத்துக்கு பெயர் பெற்றவர் பார்த்திபன். அதற்கு தகுந்தார்போலவே பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கு ‘ஒத்த செருப்பு’ என்று பெயர் சூட்டியுள்ளார். இதன் முதல் வீடியோ பார்வையை சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். 2014-ல் வெளியான ‘கதை திரைக்கதை இயக்கம்’ என்ற படத்தை இயக்கிய பார்த்திபன் அதற்கடுத்து ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 2017, ஜனவரி மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த பார்த்திபன் மீண்டும் படத்தை இயக்க முடிவு செய்துள்ள படம் ‘ஒத்த செருப்பு’.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். வெளியாகியுள்ள வீடியோவை பார்க்கும்போது இந்த படம் ஹாரர் த்ரில்லர் ரகபடமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த பட அறிவிபை விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘ஆத்தா நான் உண்டாயிட்டேன்… பிரசவ பரவசம் இப்பவே! துவக்கி வைத்த நண்பர் திரு.விஜய் சேதுபதிக்கு நன்றி!’ என்று பதிவிட்டுள்ளார். இப்போது விஷாலின் ‘அயோக்யா’ படத்தில் நடித்து வரும் பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளை விரைவில் துவங்க இருக்கிறார்.

#OththaSerupu #Parthiban #SanthoshNarayanan #RadhakrishnanParthiban

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;