ராகவா லாரன்ஸ் இயக்கி, கதையின் நாயகனாகவும் நடிக்கும் படம் ‘முனி-4 காஞ்சனா-3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் வேதிகா, ஓவியா, கோவை சரளா, மனோபாலா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்றும் அந்த பணிகள் மிக விரைவில் முடிந்து விடும் என்று தெரிவித்துள்ள படக்குழுவினர் இந்த படத்தை ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிட இருக்கிறது என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே இப்படம் ஏப்ரல் 18-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் ஏப்ரல் 18-ஆம் தேதி பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற இருப்பதால் அத்தேர்தல் முடிந்ததும் மறுநாள் ‘முனி-4 காஞ்சனா-3’ உலகம் முழுக்க வெளியாகும் என்று இப்போது அறிவித்திருக்கிறார்கள்.
#Muni4 #Kanchana3 #RaghavaLawrence #Oviya #Vedhika #KovaiSarala #KabirDuhanSingh
#Manobala #Sriman #Devadarshini #Sathyaj
சமீபத்தில் வெளியான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தை தொடர்ந்து ஆரவ் நடிப்பில் அடுத்து வெளியாக...
‘வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக சற்குணம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம்...
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா ஆகியோர் நடித்து 2010-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘களவாணி’....