சந்தானம் நடிக்கும் ‘A1’ அப்டேட்!

சந்தானம் நடிக்கும் அக்யூஸ்ட் நம்பர் 1 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் ஆரம்பமாகிறது!

செய்திகள் 6-Mar-2019 12:43 PM IST VRC கருத்துக்கள்

‘தில்லுக்கு துட்டு-2’ படத்தை தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படம் ‘A1’. அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள தாரா அலிஷா நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘அக்யூஸ்ட நம்பர் 1’ என்று பொருள்ப்படும்படி ‘A1’ என்று வித்தியாசமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ‘சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்யும் விதமாக அப்படங்களின் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

#A1 #Santhanam #SanthoshNarayanan #A1AccusedNo1 #SaNa

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;