போலீஸ் வேடமேற்கும் நந்திதா ஸ்வேதா!

நந்திதா ஸ்வேதா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் ‘IPC 376’

செய்திகள் 6-Mar-2019 11:26 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக போலீஸ் கதைகளை கொண்ட நிறைய படங்கள் உருவாகி வருகிறது. அந்த வரிசையைல் நந்திதா ஸ்வேதாவும் ஒரு படத்தில் போலீஸ் வேடமேற்று நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘IPC 376’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘பவர் கிங் ஸ்டுடியோஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் எஸ்.பிரபாகர் தயாரிக்கும் இந்த படத்தை ராம்குமார் சுப்பராமன் இயக்குகிறார். இவர் இயக்குனர்கள் பிரபு சாலமன், பாலசேகரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்! சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் நந்திதா ஸ்வேதா கையில் துப்பாக்கி சகிதம் போலீஸ் கெட்-அப்பில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதாவுடன் யாரெல்லாம் இனைந்து நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு கே.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஆர்,நிர்மல் கவனிக்கிறார்.
#NanditaSweta #IPC376 #RamkumarSubbaraman #Nandita

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலாதி அன்பை வீடியோ பாடல் - அசுரவாதம்


;