‘LKG’ இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

‘LKG’ படத்தை இயக்கிய ஆர்.பிரபுவுக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

செய்திகள் 5-Mar-2019 11:34 AM IST VRC கருத்துக்கள்

ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘LKG’. இந்த படத்தை பிரபுதேவாவுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.ஆர்.பிரபு இயக்கியுள்ளார். இவர் இயக்கிய முதல் படம் இதுவே! அரசியல் நய்யாண்டி கலந்த ஜனரஞ்சக படமாக வெளியான இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்தார். இந்த படம் வெற்றிப் படமாக அமைந்து நல்ல வசூல் ஈட்டியுள்ள நிலையில் இந்த படத்தை இயக்கிய கே.ஆர்.பிரபுவுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அத்துடன் படக்குழுவினர் ஓவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார்.

இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறும்போது, ‘‘ஒருவரை ஒருவர் மனதார நம்பியதுதான் எங்களை இந்த அன்பான கொண்டாட்டத்தில் ஒன்று சேர்த்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் கே.ஆர்.பிரபு இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘‘எனக்கு பேச வார்த்தைகளே இல்லை. எந்த ஒரு இயக்குனருக்கும் ரசிகர்களின் இதயங்களை வெல்வதுதான் குறிக்கோளாக இருக்கும். அதற்கு எனக்கு உதவிய ஆர்.ஜே.பாலாஜி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்’ ’என்று கூறியுள்ளார்.



#LKG #RJBalaji #PriyaAnand #KRPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டிரைலர்


;