சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய்சேதுபதி!

வண்டலூர் உயிரியல் பூங்காவில்  சிவகார்த்திகேயன தொடர்ந்து புலியை தத்தெடுத்த விஜய்சேதுபதி!

செய்திகள் 4-Mar-2019 5:49 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் பல்வேறு கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் விஜய்சேதுபதி. அத்துடன் பல்வேறு சமூக சேவைகளிலும் தன்னை அவ்வப்போது அர்ப்பணிப்பவர் விஜய்சேதுபதி! அதன் தொடர்ச்சியாக விஜய் சேதுபதி நேற்று சென்னை வண்டலூரில் உள்ள உயிரியில் பூங்காவுக்கு வருகை தந்தார்! அப்போது அங்குள்ள இரண்டு புலிகளை விஜய் சேதுபதி தத்தெடுத்தார். அத்துடன் அந்த புலிகளின் பராமரிப்பு செலவிற்காக விஜய் சேதுபதி உயிரியல் பூங்கா நிர்வாகிகளிடம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார். ஏற்கெனவே இது போன்று நடிகர் சிவகார்த்திகேயனும் வண்டலூரி உயிரியில் பூங்காவில் ஒரு புலியை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய்சேதுபதியும் புலிகளை தத்தெடுத்துள்ளார்.

விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படங்கள் சீனுராமசாமியின் ‘மாமனிதன்’ மற்றும் தியாகாராஜன் குமாரஜா இயக்கியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய்சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள்டம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;