இது, பரத் படங்ளில் முதல் முறை!

பரத், நமீதா, இனியா, ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கும் பொட்டு 1000-க்கும் மேற்பட்ட  தியேட்டர்களில் வெளியாகிறது!

செய்திகள் 4-Mar-2019 4:58 PM IST VRC கருத்துக்கள்

வடிவுடையான் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடிக்க, நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் படம் ‘பொட்டு’. இவர்களுடன் தம்பி ராமையா, பரணி, ‘நான் கடவுள் ராஜேந்திரன்’, ஊர்வசி, சாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் நடித்துள்ள இந்த படத்தை வருகிற 8-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். மருத்துவ கல்லூரியின் பின்னணியில் படு பயங்கர ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் தயாரித்துள்ளனர். பரத் பெண் வேடம் ஏற்று நடித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என்றும் கேரளாவில் தமிழ் மொழியிலேயே வெளியாகிறது என்றும் தெரிவித்துள்ள படக்குழுவினர் ‘பொட்டு’ எல்லா மொழிகளும் சேர்த்து 1000-த்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வருகிற 8-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். பரத் இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படம் தான் ஒரே தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறதாம். ‘பொட்டு’ படத்தில் இசைக்கு அம்ரீஷ், ஒளிப்பதிவுக்கு இனியன் ஹரீஷ், படத்தொகுப்புக்கு எலீசா ஆகியோர் கை கோர்த்துள்ளனர்.

#Bharath #Iniya #Namitha #SrushtiDange #AmreshGanesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;