மீண்டும் போலீஸ் வேடமேற்கும் அருண் விஜய்!

‘குற்றம்-23’ படத்தை தொடர்ந்து மற்றுமொரு படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் அருண் விஜய்!

செய்திகள் 4-Mar-2019 11:50 AM IST VRC கருத்துக்கள்

அருண் விஜ்ய இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘தடம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, அருண் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ‘குற்றம்-23’ படத்தில் சுறுசுறுப்பான போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்திய அருண் விஜய் மீண்டும் இந்த புதிய படத்திலும் போலீஸ் வேடமேற்கிறார். இந்த படத்தை இயக்குனர் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை சாமர்த்தியமாக புலனாய்வு செய்து கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் வேடமாம்! இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வு முடிவடைந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் துவங்க உள்ளது. ‘ தடம்’ படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த படம் தவிர அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க இருக்கிறது.

#ArunVijay #Thadam #Kuttram23

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;