சீனுராமசாமியின் அடுத்த பட அறிவிப்பு!

சீனுராமசாமி அடுத்து இயக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது!

செய்திகள் 28-Feb-2019 10:55 AM IST VRC கருத்துக்கள்

எதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி "தென்மேற்கு பருவகாற்று", "நீர்பறவை", "தர்மதுரை", "கண்ணே கலைமானே" ஆகிய படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'மாமனிதன்'. இந்த படத்தை தொடர்ந்து டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

'டைம் லைன் சினிமாஸ்' சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜுன் இயக்கிய எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டனர். இந்நிறுவனத்தின் இரண்டாவது படமாக "ரெட் ரம்" என்ற திரைப்படத்தை அஷோக் செல்வன் நடிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

டைம் லைன் சினிமாஸின் முன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

#SeenuRamasamy #KanneKalaimaane #Neerparavai #Dharmadurai #ThenmerkuParuvaKaatru
#VaralaxmiSarathKumar #Sathyaraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம்ம போத ஆகாதே சிங்கள் ட்ராக்


;