அபி சரவணன், வெண்பா நடிக்கும் ‘மாயநதி’

அறிமுக இயக்குனர் அஷோக் தியாகராஜன் இயக்கத்தில் அபி சரவணன், வெண்பா நடிக்கும் படம் ‘மாயநதி’

செய்திகள் 26-Feb-2019 3:13 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுகம் அஷோக் தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் படம் ‘மாயநதி’. இந்த படத்தில் ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அபி சரவணன் கதாநாயகனாகவும், ‘காதல் கசக்குதய்யா’, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன் அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ‘மாயநதி’ படம் குறித்து இயக்குனர் அஷோக் தியாகராஜன் கூறும்போது, ‘‘மகள் மீது அதீத பாசமும் நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாககொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒரு இளைஞன் இவர்களை சுற்றிச் சுழலும் கதையே ‘மாயநதி’ என்று கூறியுள்ளார்.

இந்த படத்திற்கு இளையராஜாவின் மகள் பவதாரணி இசை அமைக்க அவர் ஒரு பாடலையும் பாடியுள்ளார். ஸ்ரீநிவாச தேவாம்சம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மயிலாடுத்துறை, பொறையாறு, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

#AbiSaravanan #Venba #Maayanadhi #Ilayaraja #Bhavatharani #AshokThiyagarajan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;