‘SK-15’ படத்தில் இணைந்த ‘நாச்சியார்’ ஹீரோயின்!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கல்யாணி பிரியதர்சனுடன் ‘நாச்சியார்’ படப் புகழ் இவானாவும் நடிக்கிறார்!

செய்திகள் 25-Feb-2019 11:42 AM IST Top 10 கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’. இந்த படம் மே 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ஆர்.ரவிகுமார் இயக்கும் படம், பி.எஸ்.மித்ரன் இயக்கும் படம் என்று இரண்டு படங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் பிஸ்.எஸ்.மித்ரன் இயக்கும் ‘SK-15’ படத்தில் இயக்குனர் பிரியதர்சன், நடிகை லிசியின் மகள் கல்யாணி பிரியதர்சன் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற அதிராரபூர்வ தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் மற்றுமொரு ஹீரோயினும் நடிக்க இருப்பது குறித்த அதிகாரபூர்வ தகவலை இப்படத்தை தயாரிக்கும் ‘24 AM STUDIOS’ நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். அவர் ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா ஆவார்! ஒரு சில மலையாள படங்களிலும், பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்திலும் நடித்துள்ள இவானா நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் ‘SK-15’ என்பது குறிப்பிடத்தக்கது.

#SK15 #SivaKarthikeyan #SK #PSMithran #Ivana #24AMStudios

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;