கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவான படம் ‘தடயம்’

சமுத்திரக்கனி, மீரா கதிரவன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய தமயந்தி இயக்கியுள்ள படம் ‘தடயம்’

செய்திகள் 23-Feb-2019 5:41 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர்கள் சமுத்திரக்கனி, மீரா கதிரவன், பரத் பாலா ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய தமயந்தி எழுதி, இயக்கியுள்ள படம் ‘தடயம்’. ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளியாகிய ‘தடயம்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படமே ‘தடயம்’. இந்த படத்தின் கதாநாயகியாக கனி குஸ்ருதி நடித்துள்ளார். கதையின் நாயகனாக கணபதி முருகேசன் அறிமுகமாகிறார். இவர், கூத்துப்பட்டறையில் முழுநேர நடிகராக இருந்து 300-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பவர். இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராக ஜஸ்டின் கெனன்யா அறிமுகமாகிறார். இப்படத்தின் படத்தொகுப்பை பிரவீன் பாஸ்கர் கவனித்துள்ளர்.

இந்திய சமூகத்தில் மலிந்து கிடக்கிற காதல் இல்லாத திருமணங்களுக்கு நடுவே, ஒரு திருமணமில்லாத காதல் பற்றி அழகாக பேசும் திரைப்படமாம் இந்த ‘தடயம்’. முழுக்க முழுக்க கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவாகி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;